Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்லுணுகலை மலைத்தொடரில் கற்பாறைகள் சரிவு

லுணுகலை மலைத்தொடரில் கற்பாறைகள் சரிவு

நமது நிருபர்

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பசறை அமுனிவத்தை பகுதிக்கு மேற்புறமாக உள்ள லுணுகலை உப்பு மலை எனப்படும் லுணுகலை மலைத்தொடரில் முதல் பகுதியில்நேற்றிரவு கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த கற்பாறைகள் சரிந்து விழும் பகுதிக்கு கீழே பொது மக்கள் வசிக்கும் இருப்பிடங்கள் காணப்படுவதுடன் மேலிருந்து சரிந்து வரும் கற்பாறைகள் குறித்த வனப்பகுதியில் காணப்படும் பாரிய மரங்களில் மோதுண்டு நிற்பதானால் குறித்த குடியிருப்புகளுக்கு எவ்வித அனர்த்தமும் நிகழவில்லை எனவும் , இதற்கு முன்னர் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படவில்லை என அனர்த்தம் சம்பந்தமாக அவதானமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

குறித்த இடத்தை நாளைய தினம் கட்டிட ஆராய்ச்சி நிருவனத்தினர் ஆராயந்ததன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments