Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் பாரிய விபத்து; 3 பேருக்கு காயம் !

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் பாரிய விபத்து; 3 பேருக்கு காயம் !

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்று முன் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றிரவு( 07 ) மட்டக்களப்பு கல்முனை வீதியில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 3 பேரும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments