யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் ‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் திட்டத்தின் கீழ் புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (05)காலை 10:30 மணியளவில் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பமானது.
இதில் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் வடமராட்சி கிழக்கு சமூக ஆல்வலர்களான திரு.அகஸ்ரின், கனைச்செல்வன், V.J.நிதர்சன், ஆ.சுரேஸ்குமார் , திருமதி சுரேஸ்குமார், திருமதி தவனேசன் ஜெனிதா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி, மணல்காடு அருட்சகோதரி, மணல்காடு கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்


