Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகும் முன்னாள் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை பொதி செய்து வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, உடல்நலக்குறைவு காரணமாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற கால அவகாசம் கோரியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி தற்போது தனது உடைமைகளை பொதி செய்து ஏற்றுவதை காணமுடிகின்றது, மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவார் என்று அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments