Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டி20 கிரிக்கெட்; 2வது போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

டி20 கிரிக்கெட்; 2வது போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் நியூசிலாந்து களம் இறங்கும்.

அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றிக்காக இலங்கை கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11.45 மணிக்கு தொடங்குகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments