முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) நேற்று இரவு உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் அவரது உடலுக்கு நாளை நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது;
“மன்மோகன் சிங்கின் உடல் நாளை காலை 8 மணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு 8.30 முதல் 9.30 வரை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு காலை 9.30 மணி அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும். என்றார். மன்மோகன் சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.