கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது, இயக்குனர் பிரேம் குமார் கார்த்தியின் 27-வது படமான ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘மெய்யழகன்’ படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது இயக்குனர் பிரேம்குமாரிடம் ’96’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ” 96 படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டு உருவானது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்சினையை மையாக கொண்டு உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ’96’ 2ம் பாகம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அதே எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.