Thursday, January 9, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்செட்டிக்குளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

செட்டிக்குளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) நடைபெற்றது.

செட்டிக்குளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணிப் பிரச்சினைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேய்ச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகைதந்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments