யாழ்ப்பாணத்தில் குடும்பம் ஒன்றின் மீது தந்தையும் மகனும் இணைந்து நடாத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த தந்தையும் மகனும், வீட்டில் இருந்த குடும்பத்தலைவர், வயோதிப பெண் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஆகிய மூவர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.