அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தை கட்டி காப்பாற்றுவதே கஷ்டமாக இருக்கிறது, அப்படி இருக்கும்போது அரசாங்கம் என்னதான் செய்ய முடியும்? மத்திய அரசோ, அல்லது பிரதமரோ என்ன செய்வார்கள்?
ஒரு பழைய பாடலில், ‘பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா, பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்று வரும். தங்கள் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளை சமய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமுதாய ஒழுக்கம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும்.”