Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தற்போது அரபிய கடலில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை வரும் தீபாவளி தினத்தன்று வங்காள விரிகுடாவின் அந்தமான் கடற் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது எதிர்வரும் 22ஆம்23ஆம் திகதியளவில் தமிழ்நாடு மற்றும் இலங்கை அருகே நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசம் வழியாக ஊடறுத்து செல்லக்கூடும்.

அதேவேளை மற்றும் ஒரு காற்று சுழற்சியானது எதிர்வரும் 24ஆம் தேதி உருவாகி 25ஆம், 26ஆம், 27ஆம், 28ஆம் திகதியளவில் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து சில சந்தர்ப்பங்களில் அது ஒரு புயலாக ஒரு மாறி ஆந்திர பிரதேசத்தின் தெற்கு கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ( சில சந்தர்ப்பங்களில் காட்டு சுகன் சுழற்சி நகரம் பாதையானது சற்று மாறுபடலாம் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இதன் தாக்கம் தொடர்பாக வரும் நாட்களில் விளக்கமாக அறிவிக்கப்படும்.

இந்த அடுத்தடுத்து வருகின்ற இந்த நிகழ்வுகளால் இலங்கைக்கு ஓரளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதேபோன்று இன்னும் சில காற்று சுழற்சிகள் உருவாகும் சந்தர்ப்பம் உள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை ஒரு நிகழ்வும்,

அதற்குப் பின்னால் 05ஆம் திகதி ஒரு நிகழ்வுமாக சில நிகழ்வுகள் உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் பெரும்பாலும் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை இடையிடையே விட்டுவிட்டு மழை கிடைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments