9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வராவிட்டால் இறுதிப்போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெறும்.
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை பின்வருமாறு:-
பிப்ரவரி 19: பாகிஸ்தான் – நியூசிலாந்து (கராச்சி)
பிப்ரவரி 20: வங்காளதேசம் – இந்தியா (துபாய்)
பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா (கராச்சி)
பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 23: பாகிஸ்தான் – இந்தியா (துபாய்)
பிப்ரவரி 24: வங்காளதேசம் – நியூசிலாந்து (ராவல்பிண்டி)
பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)
பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 27: பாகிஸ்தான் – வங்காளதேசம் (ராவல்பிண்டி)
பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா (லாகூர்)
மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து (கராச்சி)
மார்ச் 2: நியூசிலாந்து – இந்தியா (துபாய்)
மார்ச் 4: அரையிறுதி 1 (துபாய்)
மார்ச் 5: அரையிறுதி 2 (லாகூர்)
மார்ச் 9: இறுதிப்போட்டி (இந்தியா தகுதி பெறுவதை பொறுத்து)
மார்ச் 10: ரிசர்வ் டே