இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு ஒன்று கனடாவில் இன்று ஆரம்பமாகியுள்ளதாக அனைத்துலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இம் மாநாடு ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை Toronto வில் நடைபெறவுள்ளது.
October 10 ஆம் திகதி 11 ஆம் திகதி University of Toronto, Scarborough Campus ஆகிய இடங்களிலும்
October 12 ஆம் திகதி Scarborough Convention Centre ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளன.
இந்த சர்வதேச கல்வியாளர் மாநாடு, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் மொழி, கலாச்சாரம், கல்வி, சமூக முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் கருத்து வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான ஒரு தளமாக அமையவுள்ளது.
எமது தாயகத்தில் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழர்களின் அறிவியல் பங்களிப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இந்த மாநாடு அமையப்பெற்றுள்ளது.
மேலும் உலகில் பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுக் கட்டுரைகளை இம் மாநட்டில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



