Thursday, January 9, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்!

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்!

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (21) பிரதமர் ஹரிணி அமலசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

தலைமன்னார் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கையகப் படுத்தப்பட்டுள்ள மக்கள் காணிகள், பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும் அரச படைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டது.

மேலும், ஐயப்பன் பக்தர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு யாத்திரையாக பயணிப்பதற்கான விமான பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் விமான பயணக் கட்டணத்தை குறைக்குமாறு கோரினார்.

அத்துடன் கடவுச்சீட்டை பெறுவதற்காக பக்தர்கள் தமது பயணத்தின் நிமித்தம் கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வந்து, இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அதை தளர்த்தவேண்டியும், விமான கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் முன்வைத்திருந்தார்.

மேலும், இந்த சந்திப்பில் தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சில பிரதிநிதிகளும் ஐயப்பன் பக்தர்களும் இணைந்திருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments