களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரிசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 1,000 கிலோ கிராம் நிறையுடைய அரிசி மூடைகளை திருடியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும், இரவு நேரத்தில் களுத்துறை பிரதேசத்திற்கு இரண்டு முச்சக்கரவண்டிகளில் சென்று குறித்த விற்பனை நிலையத்திலிருந்து அரிசி மூடைகளை திருடிச் செல்லும் காட்சிகள் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.