ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார். பாடல் வெளியீடு ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ‘யெடி’ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் யெடி பாடல் வெளியீடு
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on