தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வெளியான “சீதா ராமம்” திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. லக்கி பாஸ்கர் படம் வெளியாகி வெற்றி பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இயக்குநராகவும் கதாநாயகனாகவும் முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் மற்றும் நானியின் 31-வது திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐகே, வீர தீர சூரன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மானும் நாயகியாக பிரியங்கா மோகனும் நடிக்கின்றனர். ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.ஏற்கனவே, பஹத் பாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ். ஜே. சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மான் படத்தில் எஸ். ஜே. சூர்யா
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on