Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா இன்று!

யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா இன்று!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேருலா வந்தார்.

முன்னை ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், லங்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம்வந்தார்.

இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, செடில்காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேறறிக்கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன மேற்கொண்டிருந்தனர். போக்குவரத்துக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது. குறிப்பாக பருத்தித்துறை மந்திகை போன்ற வழிகளினூடக ஆலயத்திற்க்கு வருகைதரமுடியும், வெளியேறும் பாதையாக வல்லிபுர ஆழ்வார் ஆலய பகுதியிலிருந்து பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் மாவடிச் சந்தியூடாக வெளியேறுவதற்க்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

போக்குவரத்து மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை காங்கேசன்துறை போலீஸ் அத்தியட்சகர் தலமையில் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாக கண்காணித்து செயற்படுத்தினர். ஒருவழிப்பாதை நடைமுறை நாளை வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத்திருவிழாவின்போதும் நடைமுறைப்படுத்தப்படும் என காங்கேசன்துறை பொலீஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.

முதலுதவி மற்றும் அவசர சுகாதார வசதிகளும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை முதலுதவி சங்கம், மக்கள் முதலுதவி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டன.

இதேவேளை நாளை சமுத்திர திருவிழாவிற்க்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

நிருபர் – மரியசீலன்-திலைக்ஸ்ன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments