பருத்தித்துறை நகரசபையினரால் நகரின் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்விளக்கு பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நகரசபையால் முதல்கட்டமாக நூறு மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகரசபை தொடர்சியாக பல்வேறு இடங்களிலும் வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையின் முதல்கட்டப்பணியே தற்போது இடம்பெற்றுவருவதாக நகரசபை தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ்போல் தெரிவித்தார்.
நிருபர் மரியசீலன் திலைக்ஸ்


