திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இருவரும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனையில் கௌரவிக்கப்பட்டனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் சர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் விருது வென்றவரும், ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநருமான கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தை இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சார்லஸ் வழங்கினார்.
பேட் மேன் டிரையாலஜி படங்கள் மூலம் மிகவும் திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கிறிஸ்டோபர் நோலன், அறிவியல் புனைவுக் கதைகளுக்கு மிகவும் புகழ்பெற்றவர்
‘தி இன்செப்ஷன்’ பட வெளியீட்டின் பின்னர் இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சார்லஸிடமிருந்து நைட் ஹூட் என்ற பட்டம் பெற்ற கிறிஸ்டோபர் நோலன், அப்போது அவரது அனைத்துப் படங்களிலும் தயாரிப்பாளராக பணிபுரிந்த அவரது மனைவி எம்மாவும் கௌரவிக்கப்பட்டார்.
கிறிஸ்டோபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “சர் கிறிஸ்டோபர் நோலன், அவரது மனைவி எம்மா இருவரும் தி டார்க்நைட் டிரையாலஜி(The Dark Knight), ஓபன்ஹெய்மர் (Oppenheimer) ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கி, தயாரித்து திரைப்படத்துறைக்கான இன்றியமையாத பங்களிப்புக்காக அரச குடும்பத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.