Thursday, January 9, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க உயர் இன பாரம்பரிய பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க உயர் இன பாரம்பரிய பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து பசுக்களையும் நிலிரவி இனத்தைச் சேர்ந்த இரண்டு பசுக்களையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கிடையிலான கொள்வனவாகப் பெற்றுக்கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள பசுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளால் தேவையான பசுக்களை விநியோகிப்பதற்கு இதுவரைக்கும் இயலாமல் போயுள்ளது.

அதனால் நேரடியாக இரண்டு அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் – வாங்கல்களாக பொருத்தமான கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை தொடர்பாக நாடுகள் சிலவற்றிலிருந்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இடையீட்டின் கீழ் பாகிஸ்தான் வணிக அபிவிருத்தி அதிகார சபையால் சஹிவால் மற்றும் நிலிரவி இனங்களைச் சேர்ந்த ஏழு சுக்கில விருத்தி கிடாரி சினை மாடுகளை எமது நாட்டுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுக்கில விருத்தி கிடாரி சினை மாடுகளை இறக்குமதி செய்து சுக்கிலங்களை விருத்தி செய்யும் வரைக்கும் சஹிவால் வகையைச் சார்ந்த 20,000 சுக்கில சினைகளை இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்திச் சபை மூலம் அரசுகளுக்கிடையிலான கொடுக்கல் – வாங்கல்களாக கொள்வனவு செய்வது பொருத்தம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து பசுக்களையும் நிலிரவி இனத்தைச் சேர்ந்த இரண்டு பசுக்களையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கு இடையிலான கொள்வனவாக பெற்றுக்கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments