அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற படம் மகாவதார் நரசிம்மா. இத்திரைப்படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகனான விஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதனை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஹோம்பாளே பிலிம்ஸ் மற்றும் கினிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம், கடந்த ஜூலை 25 அன்று திரைக்கு வந்தது. படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று மதியம் 12:30 மணியளவில் நெட்ஃபிலிக்சில் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்த அனிமேஷன் படம், வசூலிலும் பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இந்தி மொழியில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தி மொழியில் இதுவரை எந்த ஒரு அனிமேஷன் படமும் இந்த அளவு வசூலித்தது இல்லை. இதுவே முதன்முறையாகும். அதேபோல, மற்ற மொழிகளில் வந்த வசூலையும் சேர்த்து, இப்படம் மொத்தம் ரூ. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Netflix-இல் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பலரும் கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து படத்தை கொண்டாடினர். அதாவது, இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்றுள்ளது.


