ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு காசாவில் நடந்த போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலைச் செயல்களில் ஈடுபட்டதாக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் 72 பக்க அறிக்கை படி, சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு இஸ்ரேல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தச் செயல்கள் இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது போன்றவை அடங்கும்.
ஆணையம், இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவ செயல்களும் இவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசு வழக்கம்போல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது, இதனால் சர்வதேச வர்த்தகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் பரபரப்பான கருத்துக்கள் எழுந்துள்ளன.


