Tuesday, March 10, 2026
spot_img
Homeபொது செய்திகள்மூளைத் தின்னும் அமீபா: 18 பேர் பலி!

மூளைத் தின்னும் அமீபா: 18 பேர் பலி!

கேரளாவில் “மூளைத் தின்னும் அமீபா” என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபவுலேரி (Naegleria fowleri) நோயால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அமீபா பொதுவான நீச்சல் குளங்கள், நீர்நிலைகள், குழாய் நீர் மற்றும் ஏரிகள் போன்ற அசுத்தமான நீரில் காணப்படுகின்றது. அது மூக்கின் வழியாக மனித மூளையில் நுழைந்து கடுமையான மூளை அழற்சியை (meningoencephalitis) ஏற்படுத்துகிறது.

நோயின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், வாந்தி மற்றும் கழுத்து வலி போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படுகின்றன. அறிகுறிகள் பொதுவான காய்ச்சல் அறிகுறிகளோடு ஒப்பிடும்போது, சரியான நேரத்தில் நோயை கண்டறிதல் சவாலாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments