Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ருமேனிய வான்வெளியில் ரஷ்ய ட்ரோன் ஊடுருவல்!

ருமேனிய வான்வெளியில் ரஷ்ய ட்ரோன் ஊடுருவல்!

ரஷ்யா உக்ரைனில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ருமேனிய வான்வெளியிலும் ரஷ்ய ட்ரோன் நுழைந்ததாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

சிலியா வெச்சே பகுதியில் முதலில் கண்டறியப்பட்ட ட்ரோன், பின்னர் ரேடாரில் இருந்து மறைந்ததாகவும், மக்கள் வாழும் பகுதிகளிலும் அது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ருமேனியா தெரிவித்துள்ளது. இருப்பினும், அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ருமேனிய போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன. இதேவேளை, இந்த ட்ரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைய வாய்ப்பு இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், போலந்து வான்வெளியிலும் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்த நிலையில், பிரான்ஸ் ரபேல் போர் விமானங்களை பாதுகாப்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments