Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியர் கொலை – ட்ரம்ப் கடும் கண்டனம்!

இந்தியர் கொலை – ட்ரம்ப் கடும் கண்டனம்!

அமெரிக்கா, டல்லாசில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திர நாகமல்லையா (வயது 50) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்ட சந்திர நாகமல்லையா, மனைவி மற்றும் மகன் கண்முன்னே அரிவாளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சக ஊழியரான யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் அவரைத் தாக்கி, தலையை துண்டித்த பின்னர் தரையில் உருட்டி அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறியாவார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு பாலியல் வன்கொடுமை, வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர்,
“சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சட்டவிரோத குடியேறியால் நடந்த இந்தக் கொடூர செயல் நம் நாட்டில் நடைபெறக் கூடாது. குற்றவாளி மீது அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே இச்சம்பவம் கடும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments