Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பேர் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டனர்!

ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பேர் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டனர்!

மேற்கு ஆசிய மோதல் தொடரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் தளபதி யூசுப் முகமது ஜூமா உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும், கடந்த மாதம் மட்டும் 30 குடியிருப்பு கட்டடங்கள் அழிக்கப்பட்டன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், “ஹமாஸ் அமைப்பின் கடைசி பெரிய கோட்டையான காசா நகரத்தை விரைவில் எங்களால் கைப்பற்றப்படும்” எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த போர் இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இதுவரை 62,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments