நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். மாமன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர். இன்று(டிச., 16) படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு துவங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார் இயக்குநர். ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார்