பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு நேற்று (11) உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினரால் வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பதவியில் இருந்து விலக மறுத்து இராணுவப் புரட்சிக்கான சதித்திட்டம் தீட்டியதாக போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி என ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.


