நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (16) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (17) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருவமாறு;
பதுளை – ஹப்புத்தளை, ஹாலிஎல, பசறை ,எல்ல
கண்டி – மெததும்பர, பாததும்பர
குருணாகல் – ரிதிகம
மாத்தளை – இரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள்