Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்எலுமிச்சையை நசுக்க முயன்றபோது விபத்து!

எலுமிச்சையை நசுக்க முயன்றபோது விபத்து!

புதிய கார் வாங்கியவுடன் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்வது பலரது வழக்கமாகும். ஆனால் டெல்லியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், மாணி பவார் என்ற பெண் புதிதாக காரை வாங்கி பூஜை செய்தார். வழக்கம்போல் காரின் சக்கரங்களுக்கு கீழே எலுமிச்சை வைத்து, அதனை நசுக்க காரை இயக்கினார்.

அப்போது காரில் இருந்த ஷோரூம் ஊழியர் விகாஸுடன் பேசிக்கொண்டிருந்த மாணி பவார் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார்.

இதன் விளைவாக கார் கட்டுப்பாட்டை இழந்து, ஷோரூமின் முதல் மாடியின் கண்ணாடியை உடைத்து கீழே விழுந்தது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சாலையில் தலைகீழாக கிடந்த காரின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு விமர்சனங்களை தூண்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments