Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - இருவர் கைது | நீரில் மிதந்தவாறு இரு சடலங்கள் மீட்பு!

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது | நீரில் மிதந்தவாறு இரு சடலங்கள் மீட்பு!

கிராண்ட்பாஸ், மாவத்த பகுதியில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தவரா அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேபோல் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பார்பர் வத்த, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதானவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் வாசிக்க >>>

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments