மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 5 மாதிரிகள் ஐஸ் அல்லது மெத்தம்பெட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (06) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட காணியில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் ஐஸ் போதைப்பொருளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட வலுவான முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பொதுமக்கள் இருப்பதாகவும், அவ்வாறான உதவிகளை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
காணாமல் போன 6,700 பேர் குறித்த முதற்கட்ட விசாரணை நிறைவு!
16 மாணவர்கள் கைது – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை!
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


