Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(ஆகஸ்ட் 31) ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற புகைப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

“ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments