Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதில் பல்வேறு அடுக்குகள் இருப்பதால் ஜிஎஸ்டி வரி முறையை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசும் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இதற்கிடையே இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும்

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments