Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

எனது சக குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகத்தை திருட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் முக்கியமான, பன்முகத்தன்மை நமது மிகப்பெரிய பலமாக போற்றப்படும் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப இந்த நாளில் நமது உறுதியை வலுப்படுத்துவோம்.

உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் என்பதாகும். ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழக்கூடிய வகையில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கற்பனை செய்த லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments