நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், அந்நாட்டு இரு சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பாதுகாப்பு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நேபாள பாதுகாப்புப் படைகள் தீவிர ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மேலும், தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


