6 தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கூட்டணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள் வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.
இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் இரா.சாணக்கியன் எம்.பி. ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பதிலிலேயே ஓகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.


