Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மியன்மார் சைபர் குற்றக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட 6 இலங்கையர்கள் ..

மியன்மார் சைபர் குற்றக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட 6 இலங்கையர்கள் ..

மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாக மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதில்  மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியே அவர்கள், சுற்றுலா விசாவில் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments