Tuesday, March 17, 2026
spot_img
Homeஉலக செய்திகள்55 வயதில் 31வது முறையாக எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த நேபாள நபர் காமி ரீட்டா

55 வயதில் 31வது முறையாக எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த நேபாள நபர் காமி ரீட்டா

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உச்சியை அடைவது சாதனையாக கருதப்படுகிறது. இந்தநிலையில், நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும் இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள்.

அப்படி மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா (55 வயது) என்ற நேபாளி,எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் அதிக அளவில் ஏறி சாதனை படைத்தவர். தற்போது அவர் 31வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை 27 மே 2025 அன்று வெற்றிகரமாக ஏறினார்.

இதன் மூலம், இவர் அதிக முறை எவரெஸ்ட் ஏற்றம் எனும் கின்னஸ் உலக சாதனையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளார். காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். காமி ரீட்டா நல்ல ஆரோக்கியத்துடன், மற்ற குழுவினருடன் சேர்ந்து பேஸ் கேம்ப் நோக்கி இறங்கத் தொடங்கி உள்ளார்.

குழுவினர் இன்று பேஸ் கேம்பை அடைந்து நாளைக்குள் தலைநகருக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளது. 31வது முறையாக உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி, அதிக முறை எவரெஸ்டில் ஏறியவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா. ரீட்டா முதன்முதலில் 1994 இல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் அதில் ஏறி வருகிறார், மலை மூடப்பட்ட மூன்று ஆண்டுகள் தவிர. அவரது நெருங்கிய போட்டியாளர் சக நேபாளி ஷெர்பா பசாங் தாவா ஆவார், அவர் 29 முறை சிகரத்தை எட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments