Friday, July 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்500 "சிலோன் தேயிலை கிராமங்கள்'' ஐ நிறுவும் திட்டம் ஆரம்பம்

500 “சிலோன் தேயிலை கிராமங்கள்” ஐ நிறுவும் திட்டம் ஆரம்பம்

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்தும் நோக்கில், 500 “சிலோன் டீ வில்லேஜ்” கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (15) கொத்மலையில் ஆரம்பமானது.

இந்த வேலைத்திட்டமானது இலங்கையின் சிறிய தேயிலைத் தோட்டத்துறையை நவீனமயமாக்குதல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை கைத்தொழிலின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்குள் நாடளாவிய ரீதியிலுள்ள 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments