Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2029க்குள் 50 பல்துறை போக்குவரத்து மையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

2029க்குள் 50 பல்துறை போக்குவரத்து மையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

2029ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 50 பல்துறை போக்குவரத்து மையங்களை நிறுவ அமைச்சு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டிற்குள் கொழும்பில் மட்டும் 15 மையங்கள் அமைக்கப்படும் என்றும், இவற்றின் மூலம் பேருந்து, ரயில், டாக்ஸி சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என்றும் அவர் விளக்கினார்.

தேச முன்னேற்றத்திற்கான அடிப்படை போக்குவரத்து மேம்பாடே என அமைச்சர் வலியுறுத்தினார்.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், “தூய்மையான இலங்கை” தேசிய திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் செலவில் எட்டு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments