கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பம் அருகே, கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின்படி காரை ஓட்டிச் சென்ற ஐவர், தவறுதலாக காரை கடலுக்குள் இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைச் சேர்ந்த ஆண்கள் மூவரும் பெண்கள் இருவரும், வியாழக்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கிச் காரில் பயணித்தனர். மதுபோதையில் இருந்த இவர்களுக்கு, சொத்திக்குப்பம் கடற்கரையோரம் சென்றபோது, மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை கடலருகே இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் கார் கடலுக்குள் பாதியிலே நின்றது. அப்பகுதி மீனவர்கள் உடனடியாக குதித்து, காரிலிருந்த ஐவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன், காரை கனரக வாகனத்தின் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


