Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது

போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது

ஹபரணை, அனுராதபுரம் மற்றும் பிஹிம்பியகொல்லேவ ஆகிய இடங்களில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரணையில் ஒரு சந்தேக நபர் முதலில் மூன்று போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரத்தில் தலா இரண்டு போலி நாணயத்தாள்களுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணைகளில் பிஹிம்பியகொல்லேவவில் இன்று (18) மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 138போலி ரூ.5,000 நாணயத்தாள்கள், ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் ஒரு அச்சு இயந்திரம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹபரணை மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments