Sunday, March 8, 2026
spot_img
HomeUncategorized30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை மூலம் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சொத்து வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோதமாகப் பெற்ற நிதியைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மூன்று மாடி வீட்டைக் கொண்ட 14.1 பேர்ச் நிலத்தை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (19) முதல் ஏழு நாட்களுக்கு முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments