Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி

22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன், நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்துள்ள படம் கண்ணப்பா. சிவ பக்தர் கண்ணப்ப நாயனரின் வாழ்க்கையை தழுவி புராண படமாக உருவாகி உள்ளது. மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்பாபு, சரத்குமார், பிரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக ஜுன் 27ல் ரிலீஸாகிறது.

மோகன்பாபுவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிக்கு இந்த படத்தை போட்டு காண்பித்துள்ளார் விஷ்ணு மஞ்சு. அதுபற்றி, ‛‛கண்ணப்பா படத்தை ரஜினி பார்த்தார். படம் முடிந்ததும் என்னை இறுக்கமாக கட்டியணைத்து படம் நன்றாக உள்ளது, பிடித்தது என்றார். ஒரு நடிகராக இதற்காகத்தான் 22 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். சிவபெருமானின் மாயாஜாலத்தை இந்த உலகம் காண காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments