Friday, August 28, 2026
spot_img
Homeஉலக செய்திகள்21 ஆண்டுகளில் 469 உயிர்களை காப்பாற்றிய சீன மனிதர்

21 ஆண்டுகளில் 469 உயிர்களை காப்பாற்றிய சீன மனிதர்

சீனாவில் உயிர்மைப்புக்கு முயற்சிக்கும் நபர்களைத் தடுப்பதற்காக கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக யாங்சே நதி பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சென் சி என்ற நபர், இதுவரை 469 பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியாங்சு மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சென் சி, தனது இளமைப் பருவத்தில் வீடின்றி வாழ்ந்ததுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். பின்னர் பழக்கடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை நிலைப்படுத்தியுள்ளார்.

2000ஆம் ஆண்டு நான்ஜிங் யாங்சே நதி பாலத்தில் உயிர்மைப்புக்கு முயன்ற இளம் பெண்ணொருவரை பேசி காப்பாற்றியதைத் தொடர்ந்து, பிறரது உயிரைக் காப்பாற்றும் பணியில் அவர் ஈடுபடத் தொடங்கினார்.

2003 டிசம்பர் 19 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியிலும் பாலத்தில் நடந்து அல்லது மோட்டார் சைக்கிளில் சென்று, மன உளைச்சலில் இருப்பவர்கள் அல்லது உயிர்மைப்பை எண்ணத்தில் இருக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உரையாடி வருகிறார்.

சில சந்தர்ப்பங்களில், பாலத்தின் தடுப்புச்சுவருக்கு அப்பால் சென்றவர்களின் கைகளைப் பிடித்து அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்ட மனிதாபிமானப் பணியின் மூலம் 469 பேரை மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பச் செய்துள்ள சென் சி, இதற்காக எந்தவொரு முறையான உளவியல் பயிற்சியையும் பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments