Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

15 வயதான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் 128 என்ற எளிதான ஓட்ட இலக்கினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எளிதாக பெற்று தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 52 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.

இதன்மூலம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 47 பந்துகள் மீதமிருக்க, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியீட்டியது.

குவஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான 2026 இந்தியப் பிரீமியர் லிக் தொடரின் மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இலகுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 52 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெயஸ்வால் 38 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக நாந்த்ரே பர்கர் தெரிவானார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments