Thursday, December 12, 2024
spot_img
Homeசினிமா செய்திகள்புஷ்பா 2' ஓடும் திரையரங்கில் மீண்டும் ஒரு ரசிகர் மரணம்

புஷ்பா 2′ ஓடும் திரையரங்கில் மீண்டும் ஒரு ரசிகர் மரணம்

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா 2’ திரைப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியால் இந்த படத்திற்கு அதிகபடியான எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஈடு செய்யும் விதமாக இந்த இரண்டாம் பாகமும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

இந்த படம் வெளியான தினத்தன்று முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் சந்தியா என்கிற அந்த திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்ப்பதற்காக வந்ததால் நெருக்கியடித்த ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அந்த ரசிகை மரணம் அடைந்தார். அவரது மகன் சிறுவன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள ராயதுர்கம் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க மத்யானப்பா என்கிற நபர் புஷ்பா 2 திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் உடல்நிலை மோசமாகி தியேட்டரிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு கிடைத்ததும் விரைந்து அங்கே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் திரையரங்கு நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்ளாமல் படத்தை தொடர்ந்து ஓட்டுவதற்கு முயற்சி செய்தனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்த போலீசார் மரணம் அடைந்த ரசிகரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தியதுடன் படத்தை தொடர்ந்து திரையிடுவதையும் தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments