Wednesday, December 4, 2024
spot_img
Homeஇந்திய செய்திகள்திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு

திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு

கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.

அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் இன்று காலை வ.உ.சி. நகர் மலைப்பகுதியில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் தென் கிழக்கு பகுதியில் 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தீப மலையின் முன் பகுதியில் 2,000 அடிக்கு மேல் மிகப்பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மழை இடையிடையே பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments